Saturday, September 7, 2013

தாம் இருக்கும் வரையில், நாட்டை பிரிக்க ஒருவருக்கும் இடம் அளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

Saturday, September 07, 2013
இலங்கை::தாம் இருக்கும் வரையில், நாட்டை பிரிக்க ஒருவருக்கும் இடம் அளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நாட்டின் ஐக்கியத்தை கட்டி எழுப்பியுள்ளோம். இன்று பலருக்கு நாட்டை பிரிக்கும் எண்ணம் உள்ளது. இதில் இருந்து அவர்கள் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது புரிகிறது. அவர்களுக்கு தெரியாது, இந்த நாட்டை பிரிப்பதற்கு, இந்த தலைவன் இருக்கும் வரை அது இயலாத காரியம் என்பதனை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

இதனிடையே, பிரபாகரனால் செய்ய முடியாததை, வேறு ஒருவராலும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரபாகரனால் பிரிக்க முடியாது போன வேலையை, இப்போது இருக்கும் ஒருவரால் முடியாது என்பதை நான் தெளிவாக கூறுகிறேன்.
 
இதேவேளை எதிர்கட்சிகள் தங்களின் குறைகளை மறைத்துக் கொள்வதற்காக, அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment