Saturday, September 07, 2013
இலங்கை::கொலைவெறி படைத்த புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கம் மேற் கொண்ட யுத்தத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற முறையில், ஆயுதப்படைகளின் அஞ்சா நெஞ்சம் படைத்த மா வீரர்களே, நீங்கள் உயிர்த்தியாகம் செய்தாவது எங்கள் நாட்டை பயங்கரவாத பிடியில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று ஆயு தப்படை வீரர்களுக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கிய கார ணத்தினால்தான் புலிபயங்கரவாதிகளை அரசாங்கப்படைகள் மண்டியிட வைக்க முடிந்ததென்று இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளர்.
இலங்கை::கொலைவெறி படைத்த புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கம் மேற் கொண்ட யுத்தத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற முறையில், ஆயுதப்படைகளின் அஞ்சா நெஞ்சம் படைத்த மா வீரர்களே, நீங்கள் உயிர்த்தியாகம் செய்தாவது எங்கள் நாட்டை பயங்கரவாத பிடியில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று ஆயு தப்படை வீரர்களுக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கிய கார ணத்தினால்தான் புலிபயங்கரவாதிகளை அரசாங்கப்படைகள் மண்டியிட வைக்க முடிந்ததென்று இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளர்.
2013ம் ஆண்டின் பாதுகாப்பு கருத்தரங்கில் யுத்தம் முடிவடைந்ததன் தாக்கம் குறித்தும் இது எவ்விதம் பிராந்திய ஸ்திர நிலைக்கு உத வியிருக்கிறது என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய டாக்டர் சுப்ரமணிய சுவாமி, இந்த வெற்றிக்கு ஜனநாயக ரீதியில் தேர்ந் தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிற ந்த அரசியல் தலைமைத்துவம் உறுதுணை புரிந்தது என்று கூறி னார். யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவி செய்தன. இதற்கென இந்தியாவுடன் விசேட பரஸ்பர பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒத்துழைப்பை பெறு வதற்காக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர்களை கொண்ட 6 உறு ப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தியத் தரப் பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார செயலாளர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இடம்பெற்றனர். இக்குழுவி னர் மிகவும் இரகசியமான முறையில் யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது உடனுக்குடன் தீர்மானம் எடுத்து அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றினர். திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும், அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான கருணாநிதி அவர்களுக்கு பயங்கர வாதிகளுக்கு எதிரான யுத்தத்தின் முன்னேற்றம் பற்றி அடிக்கடி எடுத்துரைக்கப்பட்டது. பிரபாகரனும் அவனது குடும்பத்தினரும் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி மதிநுட்பத்துடன் நிலைமையை உணர்ந்து இந்த விடயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார். புலிகள் துவம்சம் செய்யப்பட்டதனால் நாட்டின் நாலா பக்கங்களி லும் அவ்வியக்கம் அப்பாவி பொதுமக்களை தமிழர், சிங்களவர் என்ற பேதமின்றி குண்டுத்தாக்குதல் மூலமும், தற்கொலை குண் டுத்தாக்குதல் மூலமும் படுகொலை செய்வது பூஜ்ஜிய நிலைக்கு திரும்பியது என்று கூறினார்.
ஐக்கிய இலங்கையின் கீழ் தமிழ் மக்களுக்கு அரசியல் சாசனத்தின் படி அதிகாரப் பரவலாக்கல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப் படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கும் பட்சத்தில் ஒற்றையாட்சி அரசியலமைப்பின்படி சில சமஷ்டி கொள்கை களை இணைக்கக்கூடிய வகையில் இலங்கை பாராளுமன்றம் தீர்மானம் எடுத்தால், இந்தியாவில் உள்ள நாம் அதற்கு ஆதர வளிப்போம் என்று கூறினார்.இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடும் என்று தமி ழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் அல்லது சார்க் அமைப்பின் கீழ் ஏதாவது பரஸ்பர உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படும் போது மாத்திரமே இந் தியா இவற்றில் சம்பந்தப்படும். 1991ம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ இந்தியாவுக்கு ஆதரவளிக்காமல் புலிபயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து அவ்வியக்கத்தை இந்திய அமைதிகாக்கும் படையுடன் மோதவிட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ்காந்தியை கொலை செய்த முருகனும், தற்கொலை குண்டுதாரியும் இந்த கொலையை செய்வதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பயணம் செய்திருப்பது இப்போது தெரியவந்திருப்பதாக அவர் சொன்னார். புலிகளை அழித்தமை குறித்து தமிழ்நாட்டு மக்களும் குறிப்பாக இந்தியர்களும் இந்தியாவுக்கு இருந்த
புலிபயங்கரவாதிகளின் தொல்லை ஒழிக்கப்பட்டமைக்காக இலங்கை இராணுவத்தினருக்கும் அரசாங்கத்திற்கும் அரசியல் தலைமைத்துவத்திற்கும் தங்கள் நன்றியை தெரிவிக்கிறார்கள் என்று கூறினார்.
இந்தியாவில் உள்ள நானும் என்னைப் போன்ற பெரும்பாலான தமி ழர்களும் சிங்களவர்களும் இரண்டு வெவ்வேறு மொழிகளைப் பேசும் இனரீதியில் ஒன்றுபட்ட சமூகம் என்ற நிலைப்பாட்டி லேயே இருக்கின்றோம். இதனை ரிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தலாம். கடந்த 12 நூற்றாண்டுகளாக இந்து மத மும், பெளத்த மதமும் சமாதானமாக தலைத்தோங்குகின்றன. புத்த பெருமான் பிறப்பில் ஓர் இந்து. அவர் ஒரு சீர்த்திருத்தவாதி. இன்று இந்துக்கள் புத்தபெருமான் தங்களுக்கு சொந்தமானவர் என்ற நம்பிக்கையில் அவரை வணங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட ஓர் அரசாங்கத்தின் ஜனாதி பதி என்ற முறையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கொலை வெறி பிடித்த பயங்கரவாத இயக்கமான புலிகளை அழித்தது ஒரு சட்டபூர்வமான செயல். இன்று இலங்கை பொருளாதார ரீதியிலும் கலாசார ரீதியிலும் மறுமலர்ச்சி அடைந்து வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று டாக்டர் சுப்ரமணிய சுவாமி மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment