Saturday, September 07, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்படும் போட்டியில் வெற்றியீட்டுபவர்கள் வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவரென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்படும் போட்டியில் வெற்றியீட்டுபவர்கள் வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவரென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை- பேச்சு மற்றும் சித்திரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
நவம்பர் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பொதுநலவாய உச்சிமாநாடு மற்றும் அதனுடன் ஒத்ததாக இளைஞர் பேரவை- மக்கள் பேரவை மற்றும் வர்த்தக பேரவை ஆகியனவும் இடம்பெற வுள்ளன.
இவற்றுடன் தொடர்பு பட்டதாகவே பாடசாலை மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இது தொடர்பிலான முழு விவரங்களும் உள்ளடக்கப்பட்ட சுற்றுநிருபம் கல்விய மைச்சினால் அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் தமிழ்- சிங்களம்- ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்படும். மாணவர்களின் வயது அடிப்படையில் போட்டிகள் மூன்று கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் கல்வி வலயத்திற்குற்பட்ட போட்டி செப்டம்பர் 15ஆம் திகதி நடத்தப்படும்.
மாகாண மட்டத்திலான போட்டி செப்டம்பர் 16 முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும். அதில் வெற்றிபெறுபவர்கள் தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்ற முடியும்.
மேலும் மேற்படி போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தமது பாடசாலை மூலமாக ஒக்டோபர் 05ஆம் திகதிக்கு முதல் பெயர்விபரங்களை கல்வியமைச்சுக்கு அனுப்பி வைக்கவேண்டுமெனவும் கல்வியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment