Saturday, September 7, 2013

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் இதுவரையில் 330 முறைபாடுகள்!:-மாகாண சபைத் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்களுக்கு பயிற்சிக் கருத்தரங்கு!

Saturday, September 07, 2013
இலங்கை::மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் இதுவரையில் 330 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

குருனாகல் மாவட்டத்தில் அதிக முறைபாடுகள் பதிவாகியுள்ளன.

அங்கு 10 வன்முறை சம்பவங்களும், தேர்தல் சம்பந்தமான முறைபாடுகள் 90ம் பதிவாகியுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் 32 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், மத்திய மாகாணத்திலேயே அதிக முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு 139 முறைபாடுகள் பதிவாகியுள்ளன.

வடமாகாணத்தின், யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக முறைபாடுகள் பதிவாகி இருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.--
 
குருநாகல் மாவட்டத்திலேயே கூடுதலான முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைபாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
 
அந்த மாவட்டத்தில் இதுவரை 90 முறைபாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்களுக்கு பயிற்சிக் கருத்தரங்கு!
 
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட பயிற்சிக் கருத்தரங்குகள் தேர்தல்கள் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் இந்த பயிற்சிக் கருத்தரங்குகள் வழங்கப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிடுகின்றார்.
 
இதேவேளை, தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment