Friday, September 20, 2013

நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று, அரசாங்கம் சர்வதேசத்தை கோரியுள்ளது!

Friday, September 20, 2013
இலங்கை::நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று, அரசாங்கம் சர்வதேசத்தை கோரியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது, அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வருகின்ற 24வது மனித உரிமைகள் மாநாட்டில், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே அமைச்சர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment