Friday, September 20, 2013
இலங்கை::நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சகல மக்களும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொள்வதன் மூலம் எமது மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நீதியானதும், நேர்மையானதுமான தேர்தலின் மூலம் மக்கள் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்காக எமது கட்சி சார்ந்தவர்கள் எந்த வகையில் பங்களிக்க வேண்டும் என்பதை நான் தொடர்ந்தும் நெறிப்படுத்தி வருகின்றேன்.
எமது கட்டாய கட்டளைகளை ஏற்று நீதியான, வன்முறைகளற்ற தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு எம் சார்ந்தவர்கள் தொடர்ந்தும் ஜனநாயக நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள்.
இதேபோல், ஏனைய தரப்பினரும் நீதியானதும், வன்முறைகளற்றதுமான தேர்தலை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment