Friday, September 20, 2013

இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது!

Friday, September 20, 2013
இலங்கை::இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நேற்று மாலை வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

நாளை மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனை கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெளிவான சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வன்முறைகளைத் தவிர்த்து, சுயாதீனமாகவும் நம்பகத் தன்மையுடனும் வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்யக் கூடிய தேர்தலை உறுதிப்படுத்துமாறு அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment