Friday, September 20, 2013
இலங்கை::நவனீதம்பிள்ளையின் அறிக்கை நடுநிலையான வகையில் அமையும் என எதிர்பார்க்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்.சுட்டிக்காட்டியுள்ளார். உண்
மை நிலைமைகளை விபரிக்கும் வகையில் இந்த அறிக்கை அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை::நவனீதம்பிள்ளையின் அறிக்கை நடுநிலையான வகையில் அமையும் என எதிர்பார்க்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்.சுட்டிக்காட்டியுள்ளார். உண்
வட மாகாண அபிவிருத்திப் பணிகளோ, படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை குறித்தோ நவனீதம்பிள்ளை கவனம் செலுத்த மாட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவனீதம்பிள்ளை தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட காரணத்தினால் பக்கச்சார்பாக செயற்பட்டு வருகி;ன்றாரா என்பதனை உறுதியாக குறிப்பிட முடியாத போதிலும், நடைபெறும் விடயங்கள் அவ்வாறான ஓர் எண்ணக்கருவினை உருவாக்கும் என்பதை மறுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாடு 65000 சதுர கிலோ மீற்றர்களைக் கொண்டது எனவும், தெற்கில் எவ்வளவோ உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ள நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் ஏன் நவனீதம்பிள்ளை மலர் வலையம வைக்க முயற்சித்தார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். உலகின் ஏனைய நாடுகளை விடவும் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் அதிகமான அளவில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment