Tuesday, September 24, 2013

வட மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தவேண்டியது கட்டாயமானதாகும்: ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல!

Tuesday, September, 24, 2013
இலங்கை::வட மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தவேண்டியது கட்டாயமானதாகும். அதனை விடுத்து ஜனாதிபதியுடன் பேசத்தயார் என்று கூறுவது கவலைக்குரியது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தனிப்பட்ட நபர் என்ற வகையில் வட மாகாண முதலமைச்சர் தமிழக முதல்வருடன் பேச்சு நடத்தலாம். ஆனால் அவ்வாறான சந்திப்புக்களில் அரசியலமைப்பையும் 13 அவது திருத்தச் சட்டத்தையும் மீறி செயற்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணத்தில் முதன்மை ரீதியாக வெற்றிபெற்றுள்ள முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


 

No comments:

Post a Comment