Tuesday, September, 24, 2013
இலங்கை::வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்களுக்கான உறுப்பினர்களை பெயரிடுமாறு, அந்தக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
வெற்றிபெற்ற கட்சிகளுக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் வீதம் மூன்று மாகாணங்களிலும் ஆசனங்கள் கிடைக்குமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
இதற்காக தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்த இரண்டு உறுப்பினர்களை பெயரிட முடியுமென தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயினும், போனஸ் ஆசனங்களுக்காக நியமிக்கப்படும் உறுப்பினர்களை கட்சியே தீர்மானிக்க வேண்டுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment