Tuesday, September, 24, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து தாம் நாட்டுக்கு விடுத்த எச்சரிக்கை உண்மையானது என்பது தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்து 4 வருடங்களின் பின்னர் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியீட்;டியுள்ளது.
வழங்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தையும் இனவாதத்தை மீண்டும் தமிழ் மக்கள் மீது ஏற்றி அவர்கள் மீண்டும் அரசியல் கேடயங்களாக மாற்றியுள்ளது.
புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து பெற்ற சுதந்திரத்தையும் அமைதி மற்றும் ஜனநாயகத்தையும் தமது பிரிவினைவாத்தை விரிவுப்படுத்த கூட்டமைப்பு பயன்படுத்தி கொண்டுள்ளது. அத்துடன் ஏற்பட்டு வந்த சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வெற்றியுடன் நின்று விடாமல் அரசாங்கத்திற்கும், அமைதியை விருப்பும் பெரும்பான்மை மக்களுக்கு சவால் விடுக்க ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசாங்கம் வெற்றி வெற்றியையும் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் பாரிய அரசியல் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு மதிப்பளிக்காது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இடமளிக்காது போனால் மீண்டும் இளைய தலைமுறையினரின் கைகளுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்படும் என கூட்டமைப்பு எச்சரித்துள்ளது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment