Sunday, September 15, 2013
இலங்கை::மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்டுவரும் வரும் வீட்டின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளன.
இலங்கை::மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்டுவரும் வரும் வீட்டின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளன.
இவ்வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி ரி.என்.எல்.கருணாரத்ன, வர்த்தகப் பொருளாதாரத ;துறைத் தலைவர் கலாநிதி அநுர குமார உதுமான்கே, கேணல் விகும் லியனகே உள்ளிட்ட பலர் இன்று மூதூர் சென்றிருந்தனர்.
றிஸானா நபீக்கிக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டதன் பின்பு மிகவும் வறுமையில் வாழும் அவரது குடும்பத்தினருக்கு வீடொன்றை அமைத்துக் கொடுப்பதாக பலர் வாக்குறுதியளித்த போதும் அவர்களில் எவரும் முன்வராத நிலையில் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகத்தினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து வீடொன்றை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment