Sunday, September 15, 2013
இலங்கை::உப்புவெளி பகுதியில் வெடிப்பொருட்களுடன் கைதான சந்தேகநபர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை::உப்புவெளி பகுதியில் வெடிப்பொருட்களுடன் கைதான சந்தேகநபர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திருகோணமலை நீத
வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஜின்னாநகர் கடற்படை முகாமிலுள்ள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, உப்புவெளி பொலிஸாரினால் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து சுமார் 17 கிலோகிராம் ஜெலடினைட் உள்ளிட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உப்புவெளி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:
Post a Comment