Tuesday, September 10, 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் கொள்கை பரப்பு விஞ்ஞாபனம் தனி ஈழம்: குணதாச அமரசேகர!

Tuesday, September 10, 2013
இலங்கை::தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் கொள்கை பரப்பு விஞ்ஞாபனம் தனி ஈழம் ஒன்று உருவாவதற்கான மக்கள் கருத்துகணிப்பை பெரும் வகையில் அமைந்துள்ளதாக தேசிய இயக்கங்களுக்கான ஒன்றியம் குற்றம்சுமத்தியுள்ளது.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய குறித்த ஒன்றியத்தின் இணைப்பாளர் குணதாச அமரசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், சில எதிர்பார்ப்புக்களை அடிப்படையாகக் தயாரிக்கப்பட்ட ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.
உண்மையில் இதனை ஒரு தேர்தல் விஞ்ஞாபனமாக கருத முடியாது என்று அவர் குறிப்பிட்டதுடன், மக்கள் கருத்துக் கணிப்பை கோரும் வகையிலும், தனி ஈழ இராட்சியம் ஒன்றை அமைப்பதற்கான அடித்தளமாக அமைவதாகவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டார்.
 
 

No comments:

Post a Comment