Tuesday, September 10, 2013
இலங்கை::இலங்கை விஜயத்தின்போது தனக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கப்பட்டது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை, இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித் துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு நேற்று ஆரம்பமானபோது இலங்கை குறித்து உரையாற்றிய நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் விடயம் குறித்து ஐ.நா. சபையுடன் இணைந்து பணியாற்றப் படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பான் கீ மூன் தனது அறிக்கை மூலம் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று புனரமைப்பு, சமரசம் மற்றும் பொறுப்பு கூறல் விடயங்கள் குறித்து ஆராய வசதி செய்து கொடுக்க ப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மத சகிப்புத் தன்மை இன்மை, நிர்வாக மற்றும் சட்டத்தின் ஆட்சி மற் றும் மனித உரிமை குறித்து இலங்கையில் ஆராய்ந்ததாக நவநீதம்பிள்ளை குறிப்பிட் டுள்ளார்.
தனது அவதானிப்புக்களை அடுத்த அறிக்கையில் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment