Tuesday, September 17, 2013

இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Tuesday, September 17, 2013
ரொறன்ரோ::இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற
து. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் பிரஜைகள் தொடாபில் பயோமெற்றிக் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 
இதன்படி, கனடா வீசா கோரும் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைவிரல் அடையாளங்களையும் புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் வீசா அல்லது ஏனைய வீசாக்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் இலங்கையர்கள் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் வீசா விண்ணப்பிக்கும் போது கைவிரல் அடையாளங்களையும் விண்ணப்பித்தில் உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment