Tuesday, September 17, 2013

பிரபகரணை உருவாக்குவதற்கு தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் அப்பாவி தமிழ் இளைஞர்கள் துணைபோக வேண்டாம்: விமல் வீரவன்ச!

Tuesday, September 17, 2013
இலங்கை::தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு உறுப்பினர்களது பிள்ளைகளும்  புலிகளில் சேர்ந்து  யுத்தம் செய்ய வில்லை. இவர்களது பிள்ளளைகள் இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் நல்ல தொழில் செய்துகொண்டு சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்!
 
கடந்த மே முதலாம் திகதி எமது கட்சி நடாத்திய மே தினக் கூட்டத்தில்  வடக்கின் மாகாண சபைத் தேர்தல்  நடாத்துவதற்கு முன்  மாகாணசபையின் 13வது அரசியல் அமைப்பில் பொலிஸ், காணி மற்றும் சில அதிகாரங்களை இல்லாதொழிக்குமாறு அரசுக்கும் ஐனாதிபதிக்கும் சொல்லியிருந்தோம்.
ஆனால் ஜனாதிபதி அதற்காக துரித நடவடிக்கை எடுத்தும் அமைச்சரவையில் இதற்கான பத்திரத்தை சமர்ப்பிக்கும்போது அமைச்சரவையில் உள்ள  இனவாத அரசியல் கட்சியின் தலைவர் மற்றும்  இந்திய உயர் ஸ்தாணிகர் அலுவலகத்தில் கட்டளைகளுக்கு இயங்குகின்ற சில அமைச்சர்களும் நடாத்திய சர்ச்சைகளினாலேயே இச் சட்டம் பிட்போடப்பட்டது.
 
அன்று அதனை அமுல்படுத்தி சட்டமன்ற ஆலோசனையைப் பெற்று நீதிமன்றம் ஊடாக 13வது சர்த்தில்  பொலிஸ், காணி அதிகாரங்களை குறைத்திருக்கலாம். என  மேற்கண்டவாறு இன்று பத்தரமுல்ல தேசிய சுதந்திரமுன்னணி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் மாநாட்டின்போது அமைச்சர் விமல் வீரவன்ச தெரவித்தார்.
 
21ம் திகதி வடக்கில் தேர்தல்  முடிவடைந்து தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு   வடக்கை கைப்பற்றி அவர்கள் தற்பொழுது முன்வைத்துள்ள தேர்தல்  விஞ்ஞாபனத்தை அமுல்படுத்துவார்களே யேயானால் இதற்கு முழுப்பொறுப்பையும் இந்த இனவாத அரசியல்வாதிகளும் இதற அமைச்சர்களும் தான் ஏற்கவேண்டும்.
 
தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு    மட்டும் வடக்கில் தேர்தல்  விஞ்ஞாபனமொன்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தி மக்களிடம் வாக்கு கேட்கின்றது. ஆனால் மக்கள் ஐக்கிய முன்னணியோ, ஜ.தே.கட்சி, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வடக்கிலோ அல்லது வயம்ப, மத்திய மகாணத்தில் தேர்தல் விஞ்ஞாபணமொன்றை அறிமுகப்படுத்தவில்லை.
 
தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு   தணியான நாடு ஒன்றை பெறுவதற்காகவும் அதற்காக வடக்கில் எங்களுக்கு பெறும்பாலான ஆணையை தந்துள்ளார்கள் என்றும் சர்வதேசத்திற்கும் சொல்லுவதற்கும் இந்த விஞ்ஞானபனத்தை வெளியீட்டுள்ளார்கள். இதன் முலம் மீள தமிழ் இளைஞர்களின் கழுத்தில் சயணைட் குப்பிகளை தொங்கவிட்டு அதில் மேலும் 10 வருடத்திற்கு தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு    அரசியல் செய்ய விரும்புகின்றது.
 
விக்னேஸ்வரன் கொழும்பில் வாழ்ந்து அங்கு படித்து, சட்டதொழில் செய்து அதில் அவர் நீதிபதியாகிவிட்டு வடக்கில் உள்ள குறைந்த சாதி இளைஞர்களை மீள போராட்டத்திற்கு அழைத்து அதில் அவர் சவாரி செய்யப் பார்க்கின்றார். இரண்டு பக்கத்திலும் அப்பாவி இளைஞர்கள் பழிக்காடகி விட்டனர். இவ் இளைஞர்கள் சிறந்த ஆற்றல் உள்ள பரம்பரையாகும். இவ்வாறான ஒரு யுகத்தை மீள ஆரம்பிப்பதற்கு  மீண்டும் ஒரு பிரபகரணை உருவாக்குவதற்கு தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு    முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் அப்பாவி தமிழ் இளைஞர்கள் துணைபோக வேண்டாம்.
விக்னேஸ்வரன் அல்லது இராசம்பந்தன் வேறு எந்தத மிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு     உறுப்பினர்களது பிள்ளைகளும்  புலிகளில் சேர்ந்து  யுத்தம் செய்ய வில்லை. இவர்களது பிள்ளளைகள் இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் நல்ல தொழில் செய்துகொண்டு சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.
 
அண்மையில் வெள்ளவத்தையிலும்  ஒன்று கூடி  மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பலத்தை நாம் பெறவேண்டும். அதற்காக வெள்ளவத்தையில் வாழும் யாழ் மக்களையும்  வடக்குக்குச் சென்று வாக்களிக்கச் செல்கின்றனர். அதற்காக வடக்கில் உள்ள சில கிராம அதிகாரிகளிடம் தற்காலிக அடையாள அட்டை வழங்கும்படியும் தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு   கூறிவருகின்றது. இவ்வியடம் சம்பந்தமாக எமது கட்சி தேர்தல்  ஆணையாளருக்கு அறிவித்துள்ளது.
 
வடக்கு மாகாணசபைக்கு சுயநிர்ணய ஆட்சி, நிதி, காணி, நீதி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் இது தணியானதொரு இரஜ்ஜியமாகும். கடந்த தமிழ் பத்திரிகையில் இவர்களது வடக்கின் தேர்தல்  விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அணைத்தையும் மொழிபெயர்த்துள்ளேன். இவை அணைத்தும் சிங்கள ஊடகங்களில் வெளிவரவில்லையெனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்
 
வடக்கில் தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு க்கு பெரும்பாண்மை ஆணையிருந்தால் தெற்கு வயம்ப மத்திய ஊவா மாகாணசபைகளிலும் ஐனாதிபதிக்கும் இந்த அரசுக்கும் பெரும்பாண்மை உள்ளது என்பதை சர்வதேச சமுகம் தெரிந்து கொள்ளல் வேண்டும். தொடர்ந்தும் அவர் தகவல் தருகையில்
 
கடந்த ஆகஸ்ட் மாத்தின் 28ம்திகதி வீரகேசரி பத்திரிகையின்  நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயத்தின் அறிக்கையைப் மொழிபெயர்ப்பை வாசித்தபோது.  அவர் பிரபாகரண் இல்லா விட்டாளும்  நீங்கள் கவலைப்படவேண்டாம்.  அதற்காக சர்வதேச அமைப்பில் நான் இருக்கின்றேன் தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியவற்றை மீள பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில்  சக்தியை பெற்றுத்தருவதாக அவரது  நடவடிக்கைகள் உள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ; விமல வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment