Tuesday, September 17, 2013
இலங்கை::சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல்கள் நடைபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை::சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல்கள் நடைபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் மற்றும் தெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடவடிக்கைகளை இராணுவத்தினரும் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுத்தினர் தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபடப் போவதில்லை எனவும், பாதுகாப்பு வழங்கும் பணிகளில் மட்டுமே ஈடுபடுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை எதிர்வரும் 25ம் திகதி இலங்கை தொடர்பில் வெளியிடும் அறிக்கை பக்கச்சார்பற்றதாக அமைய வேண்டுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment