Tuesday, September 17, 2013

பொதுமக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் என்ற செய்தியை தேர்தல் முடிவுகள் மூலம் சர்வதேசத்திற்கு உணர்த்த முடியும்: மைத்திரிபால சிறிசேன!

Tuesday, September 17, 2013
இலங்கை::பொதுமக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் என்ற செய்தியை தேர்தல் முடிவுகள் மூலம் சர்வதேசத்திற்கு உணர்த்த முடியும் என  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
மாகாண சபைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. நாங்கள் நினைத்தை விட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அதிகமான ஆதரவு கிடைக்கும். அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் உள்ள கிராமங்களில் இருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் எம்முடன் இணைந்து கொண்டனர்.
 
நீண்டகாலமாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஆளும் கட்சியுடன் இணைந்து வருகின்றனர்.  அந்த கட்சிக்கு தெளிவான தலைமை, வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினால் ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரசாரம் வெறுமையாகியுள்ளது. இதனால் அந்த கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்;திரக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியாகியுள்ளது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment