இலங்கை::வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்துக்கு அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ள பாதுகாப்பு மற்றும் ஜனநாயக சூழல் காரணமாக எவ்வித அழுத்தங்களுமின்றி அம்மக்கள் தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றமையை உங்களது வாக்களிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் வடக்கு மாகாண சபையை மீள ஸ்தாபித்து வடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை துரிதமாக பலப்படுத்துவதற்கும் நிலையான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அந்த மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.
அரசியல் நோக்கத்தை வெற்றி கொள்வது எமது எதிர்பார்ப்பல்ல. வடக்கு மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தியின் போது தெற்கு மக்களும் தமது தேவைகளை எடுத்துக் கூறாமலில்லை. எனினும், வடக்கு மக்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் எனக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவு நல்கிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment