Tuesday, September 24, 2013

இந்த முறை இடம்பெற்ற மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் போட்டியிட்ட ஆயிரத்து 506 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களை இழந்தனர்!

Tuesday, September, 24, 2013
இலங்கை::இந்த முறை இடம்பெற்ற மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் போட்டியிட்ட ஆயிரத்து 506 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களை இழந்துள்ளனர்.

தேர்தல் சட்ட திட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு சுயாதீன வேட்பாளர்களும் 2 ஆயிரம் ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

இந்த பணத்தை அவர்கள் மாகாண சபை தேர்தலுக்கான தமது வேட்பு மனு தாக்கலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில் நிறைவு பெற்ற தேர்தலில் எந்தவொரு சுயாதீன வேட்பாளரும் ஒரு ஆசனத்தைக் கூட பெறவில்லை.

இதன் காரணமாக அவர்களினால் கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட சுமார் 30 லட்சம் ரூபாவினை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

No comments:

Post a Comment