Tuesday, September, 24, 2013
இலங்கை::சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு பயணிப்பதற்கு முயற்சித்த நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த 80 படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர், கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
2010 முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலரை கைதுசெய்தனர்.
மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இதுதொடர்பில் பிரபல வர்த்தகர் ஒருவரும், கடற்படையின் சில உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment