Tuesday, September 24, 2013

வடக்கு மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் முதல் கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர்!

Tuesday, September, 24, 2013
இலங்கை::வடக்கு மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் முதல் கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அடுத்த சில தினங்களில் இந்த அறிக்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் கையளிக்கப்பட உள்ளது.

செம்படம்பர் 14ம் திகதி முதல் 21ம் திகதி வரை அவர்கள் மேற்கொண்ட கண்காணிப்பு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று பிரதான நிபந்தனைகளை கொண்டுள்ள இந்த அறிக்கை பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர் குழுவிற்கு தலைமை தாங்கிய கென்யாவின் முன்னாள் உப ஜனாதிபதி ஸ்டோபான் கலங்சோ மயூசுகோவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் இந்த அறிக்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் கையளிக்கப்பட உள்ளது.

வடக்கில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அங்குள்ள 5 மாவட்டங்களில் 67.52 வீத வாக்குகள் பதிவானமை ஜனநாயக நடவடிக்கை என கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகள் தொடர்பில் திருப்தியடைய முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment