Tuesday, September, 24, 2013
இலங்கை::பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் தனது துப்பாக்கியினால் தன்னைச் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக்க சிறிவர்தன தெரிவிக்கின்றார்.
இன்று அதிகாலை 4.30 அளவில் பேலியகொட மீன் சந்தையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் துப்பாக்கிச்சூட்டு இலக்காகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

No comments:
Post a Comment