Tuesday, September 24, 2013

மலேசியாவில் கனரக வாகனமொன்றில் பதுங்கிய நிலையில் பயணித்த 49 இலங்கையர்கள் கைது!

Tuesday, September, 24, 2013
மலேசியா::மலேசியாவில் கனரக வாகனமொன்றில் பதுங்கிய நிலையில் பயணித்த 49 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத குடியேறிகளை மலேசிய அதிகாரிகள் கைது செய்ய முனைவதாக கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கனரக வாகனமொன்றில் பதுங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுமார் 4 மணித்தியால தேடுதலின் போது சுமார் 60 சட்டவிரோத குடியேறிகளான வெளிநாட்டவர்கள் கைதாகினர்.

இவர்களில் 49 பேர் இலங்கையர்களாவர்.

வீசா நிறைவடைந்தும் மலேசியாவில் தங்கியிருந்தமை, மற்றும் போலியான ஆவணங்களை கொண்டிருந்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்களை கைதானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment