Tuesday, September 24, 2013

முகமாலையில் உழவு இயந்திரமொன்று மிதி வெடியில் சிக்கியமையினால் ஒருவர் பலியாகி இருவர் காயமடைந்து உள்ளனர்!

Tuesday, September, 24, 2013
இலங்கை::முகமாலையில் உழவு இயந்திரமொன்று மிதி வெடியில் சிக்கியமையினால் ஒருவர் பலியாகி இருவர் காயமடைந்து உள்ளனர்.
 
இன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பளை பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அல்லிப்பளையைச் சேர்ந்த 17 வயதான துரைசிங்கம் நிரோஜன் மற்றும் புலோப்பளை கிழக்கை சேர்ந்த 17 வயதான சி.குகராசா ஆகியோரே காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை பளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment