Tuesday, September, 24, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதால், இவ் விஞ்ஞாபனத்தை வாபஸ் பெற வேண்டிய நிலைமை தமிழ் கூட்டமைப்பிற்கு உருவாகலாம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி கோலோச்சப் போகின்றது. இனி கூட்டமைப்பினர் முதலாவதாக காணி, பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கான மோதலை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்வார்கள்.
அதன் பின்னர் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராட்டத்தை ஆரம்பிப்பார்கள். இவ்விரு விடயங்களை முதன்மைப்படுத்தியே கூட்டமைப்பினர் தேர்தலில் மக்கள் ஆணையை கோரினர்.
இதற்கமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
ஆனால் இலங்கையின் அரசியலமைப்பின் 157 வது சரத்தை மீறும் விதத்தில் பிரிவினையை ஊக்குவித்து விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நீதிமன்றத்தின் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இதற்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதனால் இவ்விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த கூட்டமைப்பினால் முடியாது. அது மட்டுமல்லாது இதனை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தினாலும் ஆதரவு வழங்க முடியாது.
நீதிமன்றத்தின் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் விடயங்களே நடைமுறைப்படுத்தவோ, ஆதரவு வழங்கவோ முடியாது. அது நாட்டின் சட்டத்தை மீறும் செயலாகும்.
எனவே கூட்டமைப்பினர் தமது விஞ்ஞாபனத்தை வாபஸ் பெற வேண்டிய நிலையும் உருவாகலாம்.
அதுமட்டுமின்றி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்வதற்கு சட்டரீதியான தடை ஏற்படலாம்மென. டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment