Friday, September 20, 2013
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணசாமி சந்திரசேகரன் நேற்று கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சி அங்கத்துவப்பத்திரத்தையும் பெற்றுக் கொண்டார்..இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
பின்பு சில காலம் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினராக மறைந்த தலைவர் பெரியசாமி சந்திரசேகரனுடன் இணைந்து செயல்பட்டார்.. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு நுவரெலியா மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதோடு பிரதி முதல்வராகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினால் நியமிக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே இவர் நேற்று கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டதாக நுவரெலியா மாநகரசபையின் முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment