Tuesday, September 10, 2013

இலங்கையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு இந்தியா உதவி செய்­தது: ராஜீவ் காந்­தியை கொலை செய்த புலி­களை நாமே ஒழித்தோம்: வாசு­தேவ நாண­யக்­கார!

Tuesday, September 10, 2013
இலங்கை::இலங்கையில் பயங்கரவாதத்தை  அழிப்பதற்கு  இந்தியா உதவி செய்­தது ராஜீவ் காந்­தியை கொலை செய்த புலி­களை நாமே ஒழித்தோம் எனவே இரு நாட்டு உறவை தமிழ் நாட்டு அர­சி­யல்­வா­தி­களால் இல்­லாது செய்து விட முடி­யாது என்று சமூக, ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

தமிழ் நாட்டில் உள்ள மக்கள் செல்­வாக்­கற்ற அர­சியல் கட்­சி­களே இரு நாடு­­ளுக்கு இடை­யேயும் மோதல்­களை ஏற்­­டுத்த முயற்­சிக்­கின்­றன என்றும் அமைச்சர் குற்றம் சாட்­டினார்.
 
இலங்­கை­யு­­னான நல்­லு­றவை முறித்துக் கொள்ள வேண்­டு­மென புதிய கம்­யூனிஸ்ட் கட்சி கூற­வில்லை. அதன் தமிழ் நாட்டு மாநில செய­லா­­ரான பாண்­டி­யனே தெரி­வித்­துள்ளார். எனவே இது பெரி­தாக எடுத்துக் கொள்ள வேண்­டிய விடயம் அல்ல. தமிழ் நாட்டில் உள்ள மக்கள் செல்­வாக்கு இல்­லாத அர­சியல் கட்­சி­யினர். காங்­கிரஸ் தலை­மை­யி­லான மத்­திய அர­சாங்­கத்தை நெருக்­­டியில் தள்­ளு­­தற்கே முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றன எனவும் தெரிவித்தார்
 
யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வர இந்­தியா உத­வி­யது. அதே போன்று ராஜீவ் காந்­தியை கொலை செய்த  புலி­களை இலங்­கையே அழித்­தது. எனவே இரு நாடு­­ளுக்கும் இடையே நட்­பு­றவில் எவ்­வி­தத்­திலும் விரிசல் ஏற்­படப் போவ­தில்லை என்றும் இந்­தி­யாவில் தேர்தல் நெருங்கி வரு­வதால் ஆட்­சி­­மைக்­கக்­கூ­டிய பலம் உள்ள காங்­கி­ரஸை நெருக்­­டியில் தள்­ளு­வதே தமிழ் நாட்டு அர­சி­யல்­வா­தி­களின் நோக்­­மாகும் என்றும் குறிப்பிட்டார்
 
இந்­தியா இலங்கை இரண்டு நாடு­­ளுக்கு இடை­யே­யான கடல் எல்லை பாது­காப்பு தொடர்பில் இந்­தி­யா­விற்கு கடப்­பாடு உள்ளது. எனவே அப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே கடலோரப் பாது காப்பிற்காக எமக்கு இந்தியா கப்பல்களை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் வாசு தேவ நாணயக்கார தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment