Tuesday, September 10, 2013

சப்றா நிதிநிறுவனம் நடத்தி ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்து பத்திரிகை நடத்தி, தமிழ் பேசும் மக்களின் அழிவுகளுக்கு காரணமாக இருந்து தமிழ் இனத்துரோகி: புத்திமாறாட்டத்தில் புலம்புகின்றார் :சரவணபவன்!

Tuesday, September 10, 2013
இலங்கை::சப்றா நிதிநிறுவனம் நடத்தி ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்து பத்திரிகை நடத்தி, தமிழ் பேசும் மக்களின் அழிவுகளுக்கு  காரணமாக இருந்து தமிழ் இனத்துரோகி: புத்திமாறாட்டத்தில் புலம்புகின்றார் :சரவணபவன்!
 
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்தியாவின் பொது மன்னிப்புக்காக ஏங்குகிறார் என்று சரவணபவன் வல்வெட்டித்துறையில் தேர்தல் பிரசார மேடையில் கூறியிருக்கின்றார்.

இந்தியாவின் குற்றவாளியாக தேடப்படும் காரணத்தினாலேயே இந்திய மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார் என்றும் எமது தலைவரைக் குறிப்பிட்டுள்ளார்.

எமது தலைவர் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கின்றார்கள் என்றும், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவித்து மீன்வளத்தை சுரண்டுகின்றார்கள் என்றும் கூறிவருவதோடு, இப்பிரச்சினையை இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக 5000 மீனவர்களுடன் கடலில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தப்போவதாகவும் கூறியிருந்ததையும்,

பின்னர், இலங்கை, இந்திய அரசுகள் மீனவர் பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வைக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதையும், கடல்வலயத்தை இருநாட்டு மீனவர்களும் எவ்வாறு பகிர்ந்து பயன்படுத்துவது தொடர்பாகவும் சில இணக்கங்களை கண்டுள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் சரவணபவன், எமது தலைவர் இந்தியாவிடம் பொதுமன்னிப்புக்காக ஏங்குவதாக கூறுவது புத்திசுவாதீனமானவர்களின் உளறல் போல் உள்ளது.

அதுதவிர சப்றா நிதிநிறுவனம் நடத்தி ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்தவர் பத்திரிகை நடத்தி, தமிழ் பேசும் மக்களின் அழிவுகளுக்கு குறிப்பிடத்தக்களவு காரணமாக இருந்து தமிழ் இனத்துரோகிகள் எவருக்கும் தமிழ் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றிவரும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை விமர்ச்சிக்கவோ, அவர் குறித்து கருத்துக் கூறவோ எவ்வித அருகதையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
ஈ.பி.டி.பி .


ஊத்தையனின் குசும்பும் ஊதாரியின் வம்பும்!

ஐ.நா அம்மணியை சந்திப்பதற்கு வடக்கு அமைச்சர் அலைந்தார் என்று ஊத்தையன் பத்திரிகை ஒரு கிழிஞ்சல் செய்தியை போட்டிருந்தது.

ஆனால் அம்மணி இலங்கைக்கு வாரததுக்கு முன்னமே வடக்கு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும்போது, முள்ளிவாய்க்காலில எங்கட சனம் அவலங்களுக்கு முகம் கொடுத்தபோது அம்மணியும் வரவில்லை, எந்த ஐயாவும் வரவில்லை. எண்டு கூறியிருந்ததை ஊத்தையன் பத்திரிகையின் உரிமையாளருக்கு தெரியாதுபோலை.

சர்வதேசத்தைக்காட்டி தமிழ் மக்களை ஏமாற்றாதிங்கோ என்றும் நமது பிரச்சனையை தீர்க்க நாம்தான் முன்வர வேணும் எண்டும் கூறிவரும் அமைச்சருக்கு அம்மணியைப் பார்க்க வேணும் ஆட்டுக் குட்டியைப் பார்க்கவேணும் எண்டு அலைஞ்சு திரியவேண்டிய அவசியம் இல்லை.

அம்மணியை சந்திக்க அமைச்சர் விரும்பியிருக்கவில்லை எண்டதை அம்மணியின்ர நிகழ்வுகளை கண்டு கொள்ளாமல் இருக்கே;கையே சாதாரணமானவைக்கு புரிஞ்சிருக்கும். உந்த ஊத்தையனுக்கும், அதின்ர உரிமையாளருக்கும் புரியல்லையெண்டால் அவைக்கு புத்தி மட்டே தவிர சனத்தின்ர பிரச்சினை இல்லையெல்லோ.


 

 

No comments:

Post a Comment