Wednesday, September 11, 2013
இலங்கை::சீனாவின் பிரதிப் பிரதமரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியஸ்தர்கள் சபையின் அங்கத்தவருமான லியூ யுங்ஷான் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.
கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்தபோது செய்துகொண்ட இருதரப்பு உடன்படிக்கைகளை அமுல்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கிலேயே தனது விஜயம் அமைந்துள்ளதாக சீனாவின் பிரதிப் பிரதமர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் தகவல் ஊடகத்துறை அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல- நிமல் சிறிபால டி சில்வா -லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
சீன பிரதி பிரதமர் லியூ யுங்ஷான் - பசில் ராஜபக்ஷ சந்திப்பு!
இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதற்குமான தொழில்நுட்ப பயிற்சிநெறிகளை அதிகரிக்கச்செய்வதற்கும் சுற்றுலாப்பிரயாணத்துறையை மேம்படுத்துவதற்குமான நிதியுதவியை வழங்கி இலங்கையின் வளர்ச்சிக்கு மேலும் உதவுவ தாம் தயாராக உள்ளதாக சீனாவின் பிரதிப் பிரதமரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியஸ்தர்கள் சபையின் அங்கத்தவருமான லியூ யுங்ஷான் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று கடந்த 8ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த பிரதிப் பிரதமர் நேற்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்தரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இப்பயணம் அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதிப் பிரதமர்- கலாசரம் மற்றும் ஊடகத்தறை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தினார்.
மேலும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பாக தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த பிரதிப்பிரதமர்- பல்வேறு விடயங்களுக்கு முதலீடு செய்வதற்கு சீன விநியோகஸ்தர்கள் பலர் இலங்கைக்கு வருகைத் தருவார்கள் என்றும் தெரிவித்தார்.
இக்கலந்தரையாடலில் சீனாவின் பிரதி அமைச்சர்களான சென்பென்சியன்க்-வேன்க் எரென்க்- சன் சுஜூன்- ஜயேன் ஜிகுன் மற்றும் இலஙகைக்கான சீன உயர்ஸ்தானிகர் ஜயேன் ஹோ- சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி- சுற்றாடல் பாதுகாப்புத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த- வீடமைப்பு பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்ன மற்றும் பல பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் அமைச்சக செயலாளர்களும் கலந்துக்கொண்டனர்.







No comments:
Post a Comment