Monday, September 16, 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள மக்களிடம் சமஷ்டி என கூறும் அதேவேளை, தமிழ் மக்கள் மத்தியில் சுயநிர்ணயம் என்ற கொள்கையை முன்னெடுகின்றது: விமல் வீரவன்ச!

Monday, September 16, 2013
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள மக்களிடம் சமஷ்டி என கூறும் அதேவேளை, தமிழ் மக்கள் மத்தியில் சுயநிர்ணயம் என்ற கொள்கையை முன்னெடுப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
 
செய்தியாளர் சந்திப்பொன்றில், இன்று கருத்துரைத்த அவர் காணி அதிகாரம், காவல்துறை அதிகாரம் மற்றும் சுயநிர்ணயம் எனப்படுகின்ற நீதி அதிகாரம் இருக்குமானால், அதனை விட, தனிநாடு ஒன்றிற்கு வேறு எதுவும் தேவையில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் சமஷ்டி என்ற பதத்தை பயன்படுத்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில், சுய நிர்ணய உரிமை என்ற கொள்கையை முன்னெடுப்பதாக விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.
 
 

No comments:

Post a Comment