Saturday, September 21, 2013

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தலுக்கான வாக்கயளிப்புக்கள் இடம் பெற்று வருகின்றன!

Saturday, September 21, 2013
இலங்கை::வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தலுக்கான வாக்கயளிப்புக்கள் இடம் பெற்று வருகின்றன.

இந்த மூன்று மாகாண சபைகளின் மூலம் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த தேர்தல்களுக்காக, 126 அரசியல் கட்சிகள் மற்றம் 75 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 3 ஆயிரத்து 785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த முறை வாக்குப் பதிவுகளுக்காக 43 லட்சத்து 63 ஆயிரத்து 252 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மொத்தமாக 3 ஆயிரத்து 712 வாக்கு பதிவு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இன்று காலை வாக்களிப்பு ஆரம்பமாகியதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் நுவரெலியாவில் 22% , வவுனியாவில் 19%, கண்டியில் 30%  வீத  வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் 25- 30 வீதமாகவும், குருணாகலில் வாக்களிப்பு வீதம்20 ஆக இருப்பதாகவும் எமது செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.
 
நுவரெலிய மாவட்டத்தின் அட்டன் பிரதேசத்தில் மக்கள் சுமுகமான முறையில் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
 
காலநிலை மந்தமாக இருப்பதனாலும் தொழிலாளர்களுக்கு நண்பகலின் பின்னரே வாக்களிப்பதற்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் பெரும்பாலும் வாக்களிப்பு நண்பகலின் பின்னரே சூடுபிடிக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
 
யாழ் மாவட்டத்திலும் மக்கள் வாக்களிப்பில் தீவிரம் அதேவேளை சுமுகநிலையில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
 
குறிப்பாக யாழ்நகரை அண்டிய பிரதேசங்களில் மக்கள் வழமையைவிட இத்தேர்தலில் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
 
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பாமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment