Saturday, September 21, 2013

யாழில் அரசுடன் இணைந்தார் அனந்தி' என்ற செய்தியுடன் உதயன் பத்திரிக்கை விநியோகம்!!

Saturday, September 21, 2013
இலங்கை::யாழில் யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிக்கை பெயரில்   இன்று காலை இனம் தெரியாதவர்களால் யாழ். வீதிகளில் வீசப்பட்டுள்ளது.

அரசுடன் இணைந்தார் வேட்பாளர் அனந்தி, தேர்தலை புறக்கணிக்கின்றது தமிழரசு கட்சி" என்ற தலைப்பு செய்தியுடன் அந்த பத்திரிகை யாழ். வீதிகளில் வீசப்பட்டுள்ளது.

உதயன் பத்திரிகை மாதிரியே அதே சாயலில் இந்த  பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிகை நான்கு பக்கங்களை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த உதயன் பத்திரிகை ´உரிமையா? சலுகையா? வரலாற்று முடிவு இன்று´ என்ற தலைப்புடன் வெளியாகி இருந்தது. 

No comments:

Post a Comment