Saturday, September 21, 2013

வவுனியாவில் வாக்குச்சாவடி ஒன்றில் காவல் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் வாக்காளர் ஒருவர் காயம்!

Saturday, September 21, 2013
இலங்கை::வட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் காவல் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் வாக்காளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
 
கனகராயன் குள்ம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்றே தவறுதலாக வெடித்துள்ளது.
 
அங்கு வாக்களிப்பதற்கு வருகை தந்திருந்த 24 வயதான நா.தவராசா என்பவரே  இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment