Saturday, September 21, 2013

இன்று காலை 7 மணியளவில் வாக்களிப்பு ஆரம்பமாகியதிலிருந்து நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்!

Saturday, September 21, 2013
இலங்கை::இன்று காலை 7 மணியளவில் வாக்களிப்பு ஆரம்பமாகியதிலிருந்து நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் வருமாறு:

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் இன்று மதியம் 12.00 மணிவரையான வாக்குப் பதிவுகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபடியாக 50 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் 42 வீத வாக்குகளும், நுவரெலிய மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 35 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன் வடக்கில், கிளிநொச்சி மாவட்டத்தில் 29 வீத வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 24 வீத வாக்குகளும், மன்னார் மாவட்டத்தில், 30 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபடியாக 50 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் குறுநாகல் மாவட்டத்தில் 27 வீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 20 வீத வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment