Sunday, September 22, 2013

தேர்தல்கள் சுதந்திரமானதும், நீதியானதுமான முறையில் நடைபெற்றது: தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய! (1 ஆம் இணைப்பு)

Sunday, 22, September, 2013
இலங்கை::வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோத அவர் இதனைத்  தெரிவித்துள்ளார்.
 
தேர்த்ல முடிவுகள் இன்று காலை 6 மணிக்கு முன்னதாக எதிர்பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை இரவு 10.00 மணிக்கு முன்னதாக அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
 
முதலாவது தேர்தல் முடிவினை நள்ளிரவிற்கு முன்னதாக அறிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
 
விருப்பு வாக்கு முடிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு முன்னதாக அறிவிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தேர்தல் நடைபெற்ற நேற்றைய தினம் ஒரு மரணம் சம்பவத்துள்ளதாகவும் வேறும் அசம்பாவிதங்கள் இடம்பெறவி;ல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக தேர்தல்கள் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது..
 
மாகாண சபைத் தேர்தலின் முதலாவது தபால் மூல வாக்களிப்பு தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது!
 
மாகாண சபைத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. இந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பிற்கான முடிவு வெளியாகியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 646 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பு 146 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 2 வாக்குகளையும்  பெற்றுள்ளன.

No comments:

Post a Comment