Wednesday, September 25, 2013
இலங்கை::ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை::ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தேர்தல் நடாத்தியமைக்காக அரசாங்கத்திற்க நன்றி பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்களை நடாத்துவதன் மூலம் மட்டும் வடக்கி;ல் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டும் முதல் கட்டமாக இதனைக் கருத வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
1956ம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் தங்களது ஜனநாயக விருப்பங்களை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டுமென்றே கோருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சாசனத்தில் காணப்படும் உரிமைகளை புறக்கணிப்பதற்கு
அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு இன சமூகத்திற்கு மட்டும் அதிகாரத்தை வரையறுப்பதன் மூலம் நாடு பிளவுபடுவதனை தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment