Wednesday, September 25, 2013

மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக அனோமா பொன்சேகாவை நிறுத்த ஜனநாயகக் கட்சி தீர்மானத்துள்ளதாக தெரியவருகிறது!

Wednesday, September 25, 2013
இலங்கை::எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டுக்குப் பின்னர் கலைக்கப்படவுள்ள மேல் மாகாண சபையின் முதலமைச்சர்  வேட்பாளராக அனோமா பொன்சேகாவை நிறுத்த ஜனநாயகக் கட்சி தீர்மானத்துள்ளதாக தெரியவருகிறது.
 
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் கட்சி மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 5 ஆசனங்களை கைப்பற்றியதுடன் மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நடைபெற்ற பல போராட்டங்களில் அனோமா பொன்சேகா கலந்து கொண்துடன் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றுள்ளார்.
இந்நிலையில்  நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் அனோமா பொன்சேகாவை களமிறக்க பொன்சோகா தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

No comments:

Post a Comment