Wednesday, September 25, 2013
இலங்கை::இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், வட மகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வீ. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார்.
இலங்கை::இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், வட மகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வீ. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார்.
எதிர்வரும் மாதம் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
குர்ஷித் வெளிவிவகார அமைச்சராக பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் குர்ஷித் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்திய மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment