Wednesday, September 25, 2013
இலங்கை::வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான அறிக்கை சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்த்ரசிறி கஜதீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை::வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான அறிக்கை சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்த்ரசிறி கஜதீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, நேற்றைய தினம் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சா
லையில் ஏற்பட்ட அமைதியின்மைபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தவிர்ப்பதற்கான 17 யோசனைகளும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையில் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட இந்த மோதல் சம்பவத்தில் 27 கைதிகள் உள்ளிட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிலரும் உயிரிழந்தனர்.
சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் வெலிக்கடை சிறைச்சாலையை சோதனையிடச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையின் கைதி ஒருவர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினையொன்றை முன்வைத்து இந்த கைதி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்த்ரசிறி பள்ளேகம தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இவர் கூரை மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

No comments:
Post a Comment