Friday, September 20, 2013

நாளை இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தல் வாக்களிப்பின் பொருட்;டு வாக்களிப்பு நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன!

Friday, September 20, 2013
இலங்கை::நாளை இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தல் வாக்களிப்பின் பொருட்;டு வாக்களிப்பு நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக 24 ஆயிரத்து 500 காவல்துறை அதிகாரிகள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நிறைவடைந்தன.

எனினும் சில வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் கண்காணிக்கும் அமைப்பான பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment