Friday, September 20, 2013
இலங்கை::இலங்கையின் கடல் எல்லையை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இந்திய மீன்வர்களின் மீன்பிடி படகுகளை அரச உடைமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, கடற்படை தளபதி அகியோருடன் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவிக்கின்றார்.
கைப்பற்றப்பட்டுள்ள படகுகளின் உரிமையாளர்களை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துறையாடலின் போது இந்திய மீனவர்கள் வட பகுதி கடற்பரபிற்குள் அத்துமீறி பிரவேசித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறுகின்றார்.
இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது வெற்றியளிக்கவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடல் எல்லையை மீறும் மீனவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்கும் நடவடிக்கையின் ஊடாக, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதை கட்டுப்படுத்த முடியும் எனினும், அதுவும் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment