Friday, September 20, 2013

வெல்லவாய, குடாஓயா பகுதியில் தாய் மற்றும் மகள் இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!

Friday, September 20, 2013
இலங்கை::வெல்லவாய, குடாஓயா பகுதியில் தாய் மற்றும் மகள் இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களளில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் 50 ஆயிரம் ரூபா ஒப்பந்தமொன்றின் பிரகாரம் இந்த கொலைகளை செய்துள்ளமை, விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 4 ஆம் திகதி இரவு 58 வயதான மகள் மற்றும் 85 வயதான தாய் ஆகியோர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்கள் வசித்து வந்த காணியில் இருந்து அவர்களை அகற்றுவதற்காக, கைது செய்யப்பட்டுள்ள பெண் சந்தேகநபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இந்த கொலைகளை புரிந்துள்ளனர்.

தாய் மற்றும் மகளை கொலை செய்த போதிலும், சந்தேகநபர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு பணம் வழங்கப்படவில்லை எனவும், விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது என பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment