Friday, September 20, 2013
இலங்கை::தேர்தல் விதி மீறல்களில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தினத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
காவல்துறை உத்தியோகத்தர்களோ அல்லது வேறும் அரச அதிகாரிகளோ குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் விதி மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment