Friday, September 20, 2013
UN::இலங்கையின் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு நாளை நடைபெறும் மாகாணசபைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த மாகாணசபைத் தேர்தல்களை சமாதானமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பான் கீ மூனின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் மீளமைப்பு நடவடிக்கைகளை உட்சாகப்படுத்துகின்றன.
அத்துடன் நீண்டகால யுத்தத்தின் பின்னர் நடைபெறுவதால், மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் வடக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் பங்கேற்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால யுத்தத்தின் பின்னர் நடைபெறும் தேர்தலின் மூலம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் வழிகோலும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலின் பின்னர் அனைத்து தரப்பினரும் இணைந்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment