Thursday, September 12, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுக்களை செவிமடுப்போர் முட்டாள்கள்: அரசியல் உரிமைகளை முடக்க எவராலும் முடியாது: வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி!

Thursday, September 12, 2013
இலங்கை::தமது அரசியல் உரிமைகளை முடக்குவதற்கு எவராலும் முடியாது என வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
 
தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் இதனால் நாட்டின் எந்தவொரு பாகத்திற்கும் செல்வதற்கான பூரண சுதந்திரம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுக்களை செவிமடுப்போரை முட்டாள்களாகவே கருத வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபையில் போட்டியிடும் ஆளும் கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் குற்றச்சாட்டுக்களை கவனத்திற் கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
யாருடனும் நாட்டின் எந்த இடத்திற்கும் செல்வதற்கான அதிகாரமும் உரிமையும் தமக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக ஜனாதிபதியுடனும் அவரது சகோதரரான பெசில் ராஜபக்ஷவுடனும் பல தடவைகள் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
தாம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தாலும் அதனை பொருட்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வட மாகாணத்தில் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் எந்த இடத்திற்கு செல்லக் கூடாது என தம்மை கட்டுப்படுத்த எந்தவிதமான சட்டங்களும் கிடையாது என வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை பிரதிநிதித்துவம் செய்யும் நபர் என்ற ரீதியில் தமக்கு அரசியல் உரிமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மாகாண ஆளுனர்கள் பங்கேற்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்.
ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் அரச அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
 
ஆளும் கட்சியின் வட மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஆளுனர் சந்திரசிறி கலந்து கொள்வதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment