Thursday, September 12, 2013
இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரனின் தமிழீழக்கொள்கை பிரகடனம் தற்பொழுது அரசியல் மேடைக்கு வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசியக்கொடியில் சிங்கத்தின் உருவத்தை நீக்கி விட்டு சிறுத்தையின் உருவம் ஒன்றை அதில் இடவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜோன் ஜங்கரநேசன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதனை கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
1948ம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்களின் ஒருமனதான முடிவுக்கு அமைய நாட்டின் தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டது.
தேசிய ஐக்கியத்தை மதிக்கும் இலங்கை மக்கள் அந்த கொடியின் கீழ் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நாட்டின் தேசியக் கொடி தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை.
தனிநாட்டுக்காக தினமும் கனவு கண்டுகொண்டிருந்த தமிழ் இனவாத பிரிவினைவாத சக்திகளுக்கு நாட்டின் தேசியக்கொடி தொடர்பில் பிரச்சினைகள் இருந்தன.
தனியான நாடு மற்றும் தேசியக்கொடிக்கான தேவை இவர்களுக்கு இருந்தது. இந்த கொடிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தமிழ் இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை தெங்கவிட்டு இனவாத பிரிவினைவாத போரில் அவர்களை தள்ளி விட்டனர்.
புலிகளை தோற்கடித்துள்ள நிலையில், தமிழ் மக்கள் மீண்டும் தமது முன்னைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் இளைஞர்கள் மத்தியில் இனவாத பிரிவினைவாதம் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புலிகளின் அரசியல் முன்னணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழம் என்ற கொள்கையை இன்று அரசியல் மேடைக்கு கொண்டு வந்துள்ளது என வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment