Thursday, September 12, 2013

வடக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க இரண்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு நாளைய (13) தினம் இலங்கை வருகிறது!

Thursday, September 12, 2013
இலங்கை::வடக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க இரண்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு நாளைய (13) தினம் இலங்கை வர  உள்ளது. தெற்காசிய நாடுகளை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவும் பொதுநலவாய அமைப்பு நாடுகளை சேர்ந்த 07 பேர் அடங்கிய குழுவும் நாளை இலங்கை வர  உள்ளது
 
இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் வீ. கோபாலசாமி தலைமையிலான தெற்காசிய நாடுகளின் கண்காணிப்பு குழுவில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தலா 05 பேரும் பங்களாதேஷ், நேபாளம், மாலைத்தீவு, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர்.
 
இவர்கள் நாளை மறுதினம் இலங்கை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதன் பின்னர் இந்த குழுவினர் வடக்கு மாகாணத்திற்கு பயணம் செய்ய உள்ளனர்.
 
அதேவேளை பெப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில் ஆசிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகளும் இலங்கை செல்ல உள்ளனர்.  நாளைய தினம் இலங்கை செல்ல உள்ளனர்.  இந்த குழுவில் பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தியா, பங்களாதேஷ்  உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். 
 

No comments:

Post a Comment