
Thursday, September 12, 2013
இலங்கை::எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது அரசாங்க ஊழியர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழிகாட்டல்கள் அடங்கிய கையேடு ஒன்றை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய விடயங்கள் தொடர்பில் அமைச்சு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த ஆலோசனைக் கையேடு வெளியிடப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின்போது, அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது செயற்பாடுகள், பொறுப்புகள் என்பவற்றை உரியவாறு பிற்பற்றும் நோக்குடன் இந்த ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக தேர்தல் சட்டங்களை உரிய முறையில் கடைப்பிடித்தல் மற்றும் தேர்தலின்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகிய விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவிக்கின்றார்.
அரசாங்க உத்தியோகத்தர்கள் தேர்தலின்போது தமது பொறுப்புகளை உரியமுறையில் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அதுகுறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைபாடு செய்யமுடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment